குறுவை தொகுப்பு உரங்களை வேளாண்மை இணை இயக்குனர் பார்வையிட்டார்


குறுவை தொகுப்பு உரங்களை வேளாண்மை இணை இயக்குனர் பார்வையிட்டார்
x

திருவையாறு அருகே குறுவை தொகுப்பு உரங்களை வேளாண்மை இணை இயக்குனர் பார்வையிட்டார்

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட உரங்கள் இருப்பு குறித்து தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் ஆய்வு செய்தார். அப்போது யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய உரங்களின் உண்மை இருப்பு மற்றும் புத்தக இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் வைத்தியநாதன்பேட்டை, சாத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்ட உரங்களை வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் வழங்கி பேசினார். அப்போது அவா், திருவையாறு வட்டாரத்தில் செயல்படும் 19 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை தொகுப்பு திட்ட உரம் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் வைத்தியநாதன்பேட்டை கடன் சங்க செயலாளர் தவமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, வேளாண் அலுவலர் சினேகா ஆகியோர் இருந்தனர்.

1 More update

Next Story