பொது சிவில் சட்டத்தை அதிமுக எப்போதும் எதிர்க்கிறது- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பொது சிவில் சட்டத்தை அதிமுக எப்போதும் எதிர்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொதுசிவில் சட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில்,
பொது சிவில் சட்டத்தை அதிமுக எப்போதும் எதிர்க்கிறது. அந்த நிலைப்பாட்டில் இருந்து அதிமுக பின்வாங்காது. அதனை 2019 தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லி விட்டோம்.
சிறுபான்மையின மக்களுக்கு எல்லாவிதமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது நலன், உரிமைகள் பாதுகாக்கப்படும். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story