அதிமுக வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு - நாளை விசாரணை

அ.தி.மு.க. வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதிமுக வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு - நாளை விசாரணை
Published on

சென்னை,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஓபிஎஸ்-சின் மேல்முறையீட்டை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் நாளை (புதன்கிழமை) விசாரிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com