ஜூன் 13-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 13ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 13-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

வரும் 13-ம் தேதி செவ்வாய்கிழமை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com