தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்


தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
x

அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் பயணிகள் நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாக செயல்படவில்லை.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக அரசு தடுத்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது.

திமுக விற்கு எதிர்க்கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நல்லதாக இருக்கும். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story