சென்னை,
தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.