அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத் துறை 1998-99-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவ-மாணவிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேராசிரியர்கள் வள்ளல் அழகப்ப செட்டியார் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். ஆங்கி லத்துறை தலைவர் ஜெயசாலா பேசினார். முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில் சகாய மேரி மற்றும் சாம் டேவிட் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முன்னாள் மாணவி பெனிட்டா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா அரசு கலைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் மாணிக்கம், புஷ்பலதா மற்றும் மணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் சிறப்பு விருந்தினர்கள், துறைத்தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது. முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவி ஞானாம்பாள் நன்றி கூறினார்.