அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் பொறுப்பேற்பு


அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் பொறுப்பேற்பு
x

சின்னசேலத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக டாக்டர் சக்திகிரி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பொறுப்பேற்கும் விழா சின்னசேலத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் சபீதா தமிழினி தலைமை தாங்கி மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டாக்டர் சக்திகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார். மாநில அமைப்பு செயலாளர் அபுஜி முன்னிலை வகித்தார். இதில் சென்னை, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநில செயலாளர் டாக்டர் ச.சக்திகிரி, மண்டல செயலாளர் கே.பி. சாமிநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் செந்தில், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story