இந்த திட்டம் தேவையில்லாதது... விவசாயிகளுக்கு கொஞ்சம் கூட பயனில்லை - முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அதிரடி


இந்த திட்டம் தேவையில்லாதது... விவசாயிகளுக்கு கொஞ்சம் கூட பயனில்லை - முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அதிரடி
x

சித்தூர்-தச்சூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சித்தூர்-தச்சூர் ஆறு வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்தூர்-தச்சூர் ஆறு வழி பசுமைச்சாலை விவசாயிகளுக்கு கொஞ்சம் கூட பயனளிக்க போவதில்லை என தெரிவித்தார். மேலும் ஆறு வழி பசுமைச்சாலை திட்டத்தை வளர்ச்சி என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்த முயற்சிப்பதாகவும், அதனை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

116 கிலோமீட்டர் இருக்கக்கூடிய ஆறு வழி சாலைக்காக 881 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றன எனவும் இதனால் 2 ஆயிரத்து 64 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story