கட்டிட அனுமதி வழங்குவதற்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரத்தில் திருத்தம்


கட்டிட அனுமதி வழங்குவதற்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரத்தில் திருத்தம்
x

கட்டிட அனுமதி வழங்குவதற்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரத்தில் திருத்தம் -அரசாணை வெளியீடு.

சென்னை,

வீட்டுவசதித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் சென்னை தவிர்த்த இதர உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதியளிக்க அந்த உள்ளாட்சிகளுக்கு அரசு அதிகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, அந்த உள்ளாட்சி அமைப்புகள், 10 ஆயிரம் சதுர அடி வரை முழுமையான கட்டுமான பகுதி மற்றும் 8 குடியிருப்புகள் அதே நேரம் 12 மீட்டருக்கு மேல் கட்டிடத்தின் உயரம் செல்லாமல் அதாவது அடித்தளம் மற்றும் 3 தளங்கள் அல்லது தரைதளம் மற்றும் 2 தளங்கள் என இருந்தால் அனுமதியளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், முழுமையான கட்டுமானப்பகுதி என்பது வாகனம் நிறுத்துமிடம் அல்லது அடித்தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதா? என்பதை விளக்கும்படி அரசுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனர் கோரியிருந்தார்.இதுதவிர, இந்திய கட்டுனர் சங்கத்தின் தாம்பரம் மையமானது, 10 ஆயிரம் சதுர அடி தளபரப்பு குறியீட்டில், அடித்தளம் சேராது என்பது குறித்து தனியான அறிவுறுத்தல்கள் வழங்கும்படி கோரியது.

அதேபோல, இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு (கிரெடாய்) தளப்பரப்பு குறியீட்டை கணக்கிட்டே குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கூறியது. இவற்றை பரிசீலித்த தமிழக அரசு, 10 ஆயிரம் சதுர அடி என்பதை முழுமையான கட்டுமானப்பகுதி என எடுத்துக்கொள்ளாமல் தளப்பரப்பு குறியீடு அடிப்படையில் கணக்கிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story