அமுதம் அங்காடிகளில் கொள்முதல் விலைக்கு விற்கப்படும் 14 அத்தியாவசிய பொருள்கள் – ஆர்வமாக வாங்கிச்செல்லும் பொதுமக்கள்..!


அமுதம் அங்காடிகளில் கொள்முதல் விலைக்கு விற்கப்படும் 14 அத்தியாவசிய பொருள்கள் – ஆர்வமாக வாங்கிச்செல்லும் பொதுமக்கள்..!
x

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகளில் கொள்முதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

சென்னை

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் துவரம் பருப்பு 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அமுதம் மக்கள் அங்காடியில் 500 கிராம் 15 ரூபாய் குறைவாக 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு வெளிச்சந்தையில் 75 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அமுதம் மக்கள் அங்காடியில் 500 கிராம் 15 ரூபாய் குறைவாக 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அமுதம் மக்கள் அங்காடியில் தக்காளி 1 கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 1/2 கிலோ துவரம் பருப்பு, 1/2 கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ தக்காளி என வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகளில் கொள்முதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

கோபாலபுரம், அண்ணாநகர், கே.கே.நகர், பெரியார் நகர் அமுதம் அங்காடிகளில் விற்பனை தொடங்கியது. விற்பனை தொடங்கிய நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர்.


Next Story