5 கொலை வழக்குகளில் போலீசாருக்கு 10 ஆண்டு 'டிமிக்கி' கொடுத்த பழைய குற்றவாளி கைது


5 கொலை வழக்குகளில் போலீசாருக்கு 10 ஆண்டு டிமிக்கி கொடுத்த பழைய குற்றவாளி கைது
x

5 கொலை வழக்குகளில் போலீசாருக்கு 10 ஆண்டு ‘டிமிக்கி’ கொடுத்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 38). 2012-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஹாஜி என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார். இந்த வழக்கில் சிறைக்கு சென்ற நாகூர் மீரான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் நாகூர் மீரான் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முகமது இர்பான் தலைமையிலான தனி படை போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு சென்று கடப்பா பகுதியில் தலைமறைவாக இருந்த நாகூர் மீரானை கைது செய்து திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் நாகூர்மீரான் மீது திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, மற்றும் சிப்காட் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 5 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்குகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்ததும் தெரிந்தது. கைதான நாகூர் மீரானை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story