ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர்.
கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 6-ந் தேதி யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை 6-ம் கால யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பகலில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் 3 கருடன்கள் வட்டமிட்டன. இதைக்கண்ட பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என்ற கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மகா கணபதி, சுப்பிரமணியர், ஆஞ்சநேயர் மற்றும் கொடி மரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.