அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு வழங்கக்கோரி திருப்பத்தூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருப்பத்தூர்
சம்பள உயர்வு வழங்கக்கோரி திருப்பத்தூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு நேற்று மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் லெட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 205 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல அங்கன்வாடி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல், ஊழியர் சேம நல நிதியை விடுவித்தல் மற்றும் சேம நலநிதியில் இருந்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் உண்ணாமலை, செயலாளர் பொன்மலர், பொருளாளர் புவனேஸ்வரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்புவனம் பழையூரில் உள்ள அங்கன்வாடி அலுவலகம் முன்பு திருப்புவனம் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள், மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட இணை செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.