அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன்பாக 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல அங்கன்வாடி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல், ஊழியர் சேம நல நிதியை விடுவித்தல் மற்றும் சேம நலநிதியில் இருந்து கடன் வழங்குதல், கடந்த 30 ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பதவியில் இருந்து வரும் நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
வட்டாரத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை சங்க நிர்வாகிகளிடமே பேசி சரி செய்ய வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.