அண்ணா நீச்சல் குளம் மூடல் - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல்
அண்ணா நீச்சல் குளம் மூடப்படுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நேற்று குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அண்ணா நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story