அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு


அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு
x

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) முடிவுகள் வெளியானது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இளநிலை பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டை விட கூடுலதாக 16,810 பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ளனர்.


Next Story