மண்பாண்ட கலைஞருக்கு அண்ணாமலை வாழ்த்து


மண்பாண்ட கலைஞருக்கு அண்ணாமலை வாழ்த்து
x
தினத்தந்தி 10 July 2023 10:09 PM IST (Updated: 11 July 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

பூளவாடியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் குறித்து அறிந்து அவரை சந்தித்து அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார்

திருப்பூர்

குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது27). மண்பாண்ட கலைஞரான இவர் மண்பாண்ட பொருட்கள் மட்டுமல்லாது களிமண்ணிலான சிலைகள் செய்வதிலும் கைதேர்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசீகரான இவர் 'லால்சலாம்' எனும் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரஜினி சிலையை செய்திருந்தார்.

பூளவாடியில் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜயகுமார் தாயார் மறைவிற்கு துக்கம் விசாரிக்க பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். பூளவாடியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் குறித்து அறிந்து அவரை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணாமலை கடிதம் மூலம் ரஞ்சித்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story