சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் கேட்ட நிலையில் வி.சி.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் வி.சி.க. போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com