விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் சவுளுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 34). விவசாயி. இவருடைய சகோதரரின் மனைவி சங்கீதாவிற்கும், சந்திரன் (32) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சங்கீதா, சந்திரன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும். அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்கு வந்ததாகவும் தெரிகிறது.
மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி சூளகிரியில் தங்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக லட்சுமணன் கேட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் லட்சுமணனை, சந்திரனும், அந்த பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் சேர்ந்து தாக்கினர். இதில் காயம் அடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சந்திரன், சதீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.