பொது இடத்தில் ஆபாசமாக பேசியவர் கைது


பொது இடத்தில் ஆபாசமாக பேசியவர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 1:00 AM IST (Updated: 9 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

மத்திகிரி போலீசார் மத்திகிரி சந்திப்பு சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஏ.டி.எம் அருகே நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த அல்லா பகஷ் மகன் அகமது பாஷா (வயது 23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமது பாஷாவை கைது செய்தனர்.


Next Story