தளியில் டிராக்டர் டிரைவருக்கு அரிவாள் வெட்டு2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள கல்லுபாலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 21). டிராக்டர் டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டில் உள்ள மாடியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மஞ்சுநாத்தை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய தந்தை ரவி தளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன் மஞ்சுநாத் அப்பகுதியில் உள்ள முருகேசனுக்கு சொந்தமான நர்சரி பண்ணையில் வேலை செய்ததும், அப்போது முருகேசனுக்கும் தனது தாய்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை மஞ்சுநாத் தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக முருகேசன் தனது நர்சரி பண்ணையில் பணியாற்றும் நாகராஜ் (27) என்பவருடன் சேர்ந்து மஞ்சுநாத்தை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன், நாகராஜ் ஆகிய இருவரையும் தளி போலீசார் கைது செய்தனர்.