கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 6 பேர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாடியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா, லாட்டரி சீட்டுகள்
ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் மிடிகிரிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்தபோது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஓசூர் ரெயில் நிலைய சாலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஆலப்பட்டி அருகே பாசிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (48), லைன்கொல்லை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
குட்கா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்ற கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த ரகு (65), களர்பதி அச்சுதன் (37), கதவணை பெருமாள் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கே.ஆர்.பி. அணை போலீசார் மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.