பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது

பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியா பாலக்கோட்டில் உள்ள கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரியா தான் வேலை செய்யும் கார்மென்ட்ஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வடிவேல் அவரை தேடி வந்தார். அந்த சமயம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த வடிவேல் கட்டையால் மனைவியை சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com