சிங்களாந்தபுரத்தில்வருவாய் அலுவலர்களை தாக்கிய தந்தை, மகன் கைது


சிங்களாந்தபுரத்தில்வருவாய் அலுவலர்களை தாக்கிய தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் விபத்து வழக்கு ஒன்றில் கூடுதலாக இழப்பீட்டு தொகையாக சுமார் ரூ.2 லட்சம் பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து அதனை திருப்பி பெறுவதற்காக ராசிபுரம் வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ராசிபுரம் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், உதவியாளர் மவுலீஸ்வரன் ஆகியோர் சிங்களாந்தபுரத்திற்கு சென்று மாதேஸ்வரனிடம் அவர் பெற்றிருந்த கூடுதல் இழப்பீட்டு தொகையினை திருப்பி செலுத்தும்படி தெரிவித்தனர்.

அப்போது வருவாய் அதிகாரிகளை மாதேஸ்வரன், அவருடைய மகன் ரஞ்சித் குமார் (21) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இதையடுத்து அதிகாரிகள் பேளுக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரன், ரஞ்சித் குமார் ஆகியோரை கைது செய்து ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story