2-வது திருமணம் செய்ய வற்புறுத்தல்: இளம்பெண் புகாரில் வாலிபர் கைது
2-வது திருமணம் செய்ய வற்புறுத்தியதாக இளம்பெண் புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
ஏற்காடு:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் கவியரசன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே 20 வயது பெண்ணுடன் கவியரசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த கவியரசன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஏற்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story