கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் மற்றும் எர்ரப்பட்டி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த நவீன் (வயது 23), எர்ரப்பட்டியை சேர்ந்த கார்த்தி (22) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதேபோல் எர்ரப்பட்டி கஞ்சா விற்ற நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த சதீஷ் (25) என 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story