மத்தூர் அருகேநிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது
கிருஷ்ணகிரி
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள நத்தகாயம் பகுதியை சேர்ந்தவர் வனிதா (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (53). உறவினர்கள். இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 31-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இதில் வனிதா தரப்பில் அவரும், சங்கர் (55), எழில்குமார் (22), வசந்தகுமார் (20) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து வனிதா கொடுத்த புகாரின்பேரில் நேரு (51), சுரேந்திரன் (34), சுகுமார் (36), கருணாகரன் (48) மற்றும் கோகுல்பிரசாத் (27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் கருணாகரன் தனது தரப்பில் ரங்கன் (53) காயம் அடைந்ததாக கூறியுள்ளார். அதன்பேரில் சங்கர், வனிதா, வசந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story