பாலக்கோடு அருகேமது விற்ற பெண் கைது

பாலக்கோடு அருகேமது விற்ற பெண் கைது
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு துண போலீஸ் சூப்பிரண்டு சிந்துவுக்கு புகார்கள் சென்றன.

அதன்பேரில் பாலக்கோடு போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலக்கோடு அருகே குத்தலஅள்ளியில் ருக்கு (வயது 50) என்பவர் வீட்டில் வைத்து அரசு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் இருந்து 237 மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com