கஞ்சா சாக்லேட்டுகள் விற்ற வாலிபர் கைது

ஓசூரில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா சாக்லேட்டுகள் விற்ற வாலிபர் கைது
Published on

ஓசூர்

ஓசூர் அரசனட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்ற வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் 20 கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஓசூர் அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்த பெரியண்ணன் (வயது 28) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதே போல ஓசூர் எழில் நகரில் குட்கா விற்ற அசேன் அகமது (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com