ஓசூரில் மசாஜ் சென்டரில்இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

ஓசூர்
ஓசூரில் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மசாஜ் சென்டர்
ஓசூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஸ்பா சென்டர் இயங்கி வருகிறது. இங்கு மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது இளம்பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடத்தியது தெரிந்தது. இதையடுத்து ஸ்பா சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி அங்கம்பட்டி துளசிராமன் (வயது 31), பர்கூர் தாலுகா சூலாமலையை சேர்ந்த சூடப்பன் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் கைது
இதே போல ஓசூர் மாருதி நகரில் ஸ்பா சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் தள்ளியதாக பெங்களூரு ஹெப்பாலா நாகசெட்டிஅள்ளி பந்தாரப்பா லேஅவுட்டை சேர்ந்த தீபிகா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.






