அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
Published on

சிவகாசி, 

சிவகாசி தாலுகா நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கிழக்கு நாராயணபுரம் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 40) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி, சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த மாரியப்பனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com