ஆறுமுகநேரி வள்ளி வாய்க்கால் சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேகம்


தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 6:46 PM GMT)

ஆறுமுகநேரி வள்ளி வாய்க்கால் சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி வள்ளி வாய்க்கால் சுடலை மாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

ஆறுமுகநேரி வள்ளிவாய்க்கால் சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், தீபாராதனையும் கோ பூஜை, கஜ பூஜை, சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஆறுமுகநேரி சிவன் கோவிலில் இருந்து மேல தாளத்துடன் யானை மேல் புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து முதலாம் கால யாகசாலை பூஜைகள், இரண்டாம் கால இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.

தேவார திருமுறை பாராயணம், மூன்றாம் காலையாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணி அளவில் மூலஸ்தான விமானம், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீப ஆராதனை நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் கோவில் கமிட்டி தலைவர் ஆர். ராஜரத்தினம் நாடார், இணை தலைவர் எஸ்.காளிமுத்து நாடார், செயலாளர் எஸ்.சேகர் நாடார், பொருளாளர் தனசேகர் நாடார், உதவி பொருளாளர் ஏ.வெள்ளத்துரை நாடார் திருப்பணி கமிட்டியாளர்கள் தங்கராஜ் நாடார், தங்கத் துரை நாடார், கோபால் நாடார், காமராஜர் நாடார், எஸ்.ஏ.பி.டி. எல்.அருண்குமார் நாடார், கேசவ பெருமாள் நாடார், கன்னிராஜபுரம் முருகேசன் நாடார், பி.எம்.முருகேசன் நாடார், ஏ.வேல் பாண்டி நாடார் மதுரை ராஜாராம்நாத் நாடார் மற்றும் ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜெ.பாலகுமரேசன் நாடார் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story