தாய்-மகன் மீது தாக்குதல்


தாய்-மகன் மீது தாக்குதல்
x

களக்காடு அருகே தாய்-மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு நகர தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர்கள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆறுமுகத்தின் மகன் சுடலைக்கண்ணு (வயது 27) வீட்டிற்கு செல்லும் போது, இளங்கோ மனைவி அமலபுஷ்பம் (47) வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த சுடலைக்கண்ணுவின் சகோதரர் செல்வகிருஷ்ணன் (24) வழியை மறித்து நிற்கலாமா? என கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுடலைக்கண்ணு, அவரது சகோதரர் செல்வகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து அமலபுஷ்பத்தை அவதூறாக பேசி தாக்கினர். இதனை தட்டி கேட்ட அமலபுஷ்பத்தின் மகன் ஜான் (22) என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஜான், களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய சகோதரர்களை தேடி வருகிறார்.


Next Story