ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

தமிழ்நாடு மின்வாரிய மத்திய தொழிற்சங்கம், தற்காலிக ஒப்பந்த மின்வாரிய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு, தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். மின் பாதை அமைத்தல், பராமரித்தல், பழுது நீக்குதல் போன்ற வேலைகளை செய்து வருகிறோம். மேலும், சென்னையில் வெள்ளம், சுனாமி, புயல் பாதிப்பின்போது மின்தடையை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுத்துறையில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story