லிங்கம்பட்டியில்பனைமர விதைகள் விதைப்பு


லிங்கம்பட்டியில்பனைமர விதைகள் விதைப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

லிங்கம்பட்டியில் பனைமர விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், லிங்கம்பட்டி ஊராட்சி மன்றம் சார்பில் அங்குள்ள கண்மாயில் 1000 பனைமர விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க நிறுவனர் பி.கே.நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஓவர்சீயர் வடிவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் ஆகியோர் நடவு பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் 2500 புங்கை மர விதைகளை சங்க நிறுவனர், ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினார். விழாவில் ஊராட்சி செயலாளர் தேவிகா, பணிதள பொறுப்பாளர் ராமலட்சுமி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மந்திதோப்பு, ஊத்துபட்டி, கெச்சிலாபுரம் கண்மாய்களிலும் பனைமர விதைகள் நடவு விதைக்கப்பட்டது.


Next Story