தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
தூத்துக்குடி
நாட்டின் 75-வது சுதந்திரத்தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள 75 கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணியை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடல்வள தொழில்நுட்ப கழக மேற்கொண்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்.17-ம் தேதி 75 கடற்கரைகள் ஒரே நாளில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக சென்னை தேசிய கடல்வள தொழில்நுட்ப கழக இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ் அறிவுறுத்தலின்பேரில், நேற்று தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு முத்துநகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மக்கும், மக்கா குப்பைகள் பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story