பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தேனி
பெரியகுளம் தென்கரை கடைவீதி பகுதியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று காலை கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
பின்னர் கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோவில் பூசாரி ராஜசேகர் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story