சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4½ டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.840-க்கும், முல்லை ரூ.280-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.53-க்கும், பட்டுப்பூ ரூ.30-க்கும், சாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story