தூத்துக்குடி விமான நிலையத்தில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு


தூத்துக்குடி விமான நிலையத்தில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குச்சந்தையில் தனது பங்கை பட்டியலிட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தூத்துக்குடி விமான நிலையத்தில் 1150-வது ஏ.டி.எம். மையத்தை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கி, புதிய ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் ஆர்.ராஜேஷ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொதுமேலாளர் சூரியராஜ், மண்டல மேலாளர் ஆனந்த் மற்றும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story