

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சியில் மாநிலம் முழுவதும் இருந்து 34 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் அயிரை மீன் வளர்ப்பு பண்ணை தொழில் நுட்பம் குறித்த விளக்க பாடங்களும் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள் குறித்து துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான சா.ஆதித்தன் விளக்கி கூறி பயிற்சி அளித்தார்.
பயிற்சி நிறைவு நிகழ்ச்சிக்கு மீன் வளக்கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது, பொருளாதாரத்தில் நலிந்த மீனவ சமுதாயத்துக்கு இந்த பயிற்சியால் ஏற்படும் மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். மேலும் "அயிரை மீன் வளர்ப்பு" பற்றிய விளக்கங்கள் அறிய பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 8, செல்போன் : 09442288850, இ-மெயில் athithan@tnfu.ac.in என்ற முகவரியை தொர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.