உத்தமபாளையம் கோர்ட்டில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
உத்தமபாளையம் கோர்ட்டில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி மாரியப்பன் தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ராமநாதன், விரைவு கோர்ட்டு நீதிபதி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சாமிநாதன் அனைவருக்கும் கபசுர குடிநீரை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு வக்கீல் தர்மர், வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரியப்பன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் வக்கீல்கள், போலீசார் ஆகியோர் சட்டம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினர். இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.