எட்டயபுரம், விளாத்திகுளத்தில்தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
எட்டயபுரம், விளாத்திகுளத்தில்தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம், விளாத்திகுளத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
எட்டயபுரம் மேலவாசலில் நகர தி.மு.க சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் பாரதி கணேசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சவுந்தர்ராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க அரசின் சாதனைகள் குறித்து பேசினர். இக் கூட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். திமுக அரசின் சாதனைகளை தலைமை கழக பேச்சாளர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தி.மு.க நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடக்குமுத்தையாபுரம்
மேலும், புதூர் ஊராட்சி ஒன்றியம், முத்துச்சாமிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு முத்தையாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிழற்குடையை எம்.எல்.ஏ திறந்து வைத்தார். பின்னர் அப்பகுதியில் அவர் மரக்கன்று நட்டினார். இந்த நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா முத்துராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.