அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
ராமநாதபுரம்
பனைக்குளம்
ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் செய்யது அம்மாள் பப்ளிக் (சி.பி.எஸ்.இ.) பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் சார்பில் நேற்று பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதில் ஆசிரியைகள் கலாசார உடைய அணிந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்தவாறு அத்தப்பூ கோலமிட்டனர். மேலும் ஓணம் பண்டிகையின் சிறப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்று ஓணம் பண்டிகையை ஒன்றிணைந்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை சு.விசாலாட்சி தலைமையில் உதவி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.
Related Tags :
Next Story