இருசக்கர வாகனங்கள் ஏலம்


இருசக்கர வாகனங்கள் ஏலம்
x

அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பொது ஏலம் நேற்று அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு விஜயராகவன் கலந்து கொண்டு மேற்பார்வை செய்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முன்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து காலை 10 மணியளவில் ஏலம் ஆரம்பிக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய இருசக்கர வாகனத்தை ஏலம் எடுத்தனர். இதில் மொத்தம் 50 இருசக்கர வாகனங்கள் ரூ.9,03,728-க்கு ஏலம் விடப்பட்டன. முன்னதாக ஏலம் நடைபெற்று கொண்டிருந்தபோது பொதுமக்கள் அமருவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையினுள் பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் பாம்பை விரட்டியடித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story