கடலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


கடலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கடலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

நெல்லிக்குப்பம் அருகே பி.என்.பாளையம் கீழவெண்மணிநகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சண்முகம் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுகந்தி (36). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சண்முகம் கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கி இருந்ததாக தெரிகிறது.

குடி பழக்கம் கொண்ட அவருக்கு ஆஸ்துமா பிரச்சினையும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் நேற்று ஆட்டோ நிறுத்தம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்த சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி அவரது மனைவி சுகந்தி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story