ஈரடுக்கு மேம்பாலத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரடுக்கு மேம்பாலத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து
Published on

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் இருந்து டவுன் நோக்கி நேற்று இரவு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் சன்ற போது ஆட்டோ திடீரென்று நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அந்த ஆட்டோ என்ஜின் ஆப் ஆகாமல் இருந்ததால் அதிகமாக புகை வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று ஆட்டோவை தூக்கி நிறுத்தி, அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com