விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
ஜோலார்பேட்டை அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ரகாரம் ஊராட்சியில் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மண் பாரிசோதனைக்கு மண் மாதிரி எடுப்பது குறித்தும், விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில், விவசாய நிலத்தில் மண் மாதிரி எடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், மண் மாதிரிகளை சேகரிக்கும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் பயிர்களுக்கு செயற்கை உரங்களை பயன்படுத்தும் போது ஏற்படும் பாதிப்புகள், மண்புழு உரத்தை பயன்படுத்தும் போது கிடைக்கும் மகசூல் குறித்தும் எடுத்துக் கூறினர்.மேலும் விவசாய நிலத்தில் பயிர் உற்பத்தி செய்வதற்கு முன்பு மண் மாதிரிகள் எவ்வாறு எடுப்பது குறித்து கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாணவர்கள் தெளிவுபடுத்தினர்.
முகாமில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை அலுவலர் அருள், கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயகள் என பலர் கலந்துகொண்டனர்.