உயர்கல்வி படிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


உயர்கல்வி படிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

உயர் கல்வி தொடராத மாணவ, மாணவிகளுக்கு வாணியம்பாடியில் ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 'நான் முதல்வன் உயர்வுக்குபடி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று வாணியம்பாடி மருத கேசரி ஜெயின் கல்லூரியில் விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உயர் கல்வி தொடராத மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு தலைமை தாங்கி பேசினார்.

மாற்ற முடியும்

அப்போது அவர் பேசியதாவது:-

கல்வி என்பது ஒரு தலைமுறையை புரட்டிப் போடுகின்ற சக்தி படைத்தது. கல்வி மிகப்பெரிய செல்வம். என்றைக்கும் உன்னை உயர்த்தி பிடிக்கும். பல சோதனைகளை கடந்து சாதனைகளை புரிய ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும். அப்போதுதான் ஒரு தலைமுறையை மாற்ற முடியும் என அவர் பேசினார்.பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 பேருக்கு வழிகாட்டுதல் புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, தாசில்தார் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story