பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி


பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நிதிசார் கல்வியறிவு சம்பந்தமாக பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி

விழுப்புரம்

விழுப்புரம்

இந்திய ரிசர்வ் வங்கி, பள்ளி மாணவர்களிடையே நிதிசார் கல்வியறிவு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு வினாடி- வினா போட்டிகளை நடத்தியது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு வட்டாரத்திலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டிகள் நேற்று விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 26 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலக உதவியாளர் அரவிந்த், விழுப்புரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) பசுபதி, பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் காங்கேயன் ஆகியோர் நடத்தினர். நடுவர்களாக ஆசிரியர்கள் கோவிந்தன், ராஜேந்திரன் செயல்பட்டனர். இப்போட்டியில் முதலிடம் பெறும் மாணவர் மற்றும் மாணவி ஆகிய 2 பேரும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் பங்கேற்பார்கள்.


Next Story